அஜித் ரசிகர்களின் விபரீத செயல்: அதிரடி முடிவு எடுத்த பாரம்பரியமான பிரான்ஸ் தியேட்டர்!

 

அஜித் ரசிகர்களின் விபரீத செயல்: அதிரடி முடிவு எடுத்த பாரம்பரியமான பிரான்ஸ் தியேட்டர்!

அஜித் ரசிகர்கள் தியேட்டரில் உள்ள ஸ்கிரீனை சேதப்படுத்தியதால், இனி தமிழ் படங்கள் திரையிடுவதில்லை என்ற முடிவை பிரான்ஸில் உள்ள பிரபல திரையரங்கம் எடுத்துள்ளது.

சென்னை: அஜித் ரசிகர்கள் தியேட்டரில் உள்ள ஸ்கிரீனை சேதப்படுத்தியதால், இனி தமிழ் படங்கள் திரையிடுவதில்லை என்ற முடிவை பிரான்ஸில் உள்ள பிரபல திரையரங்கம் எடுத்துள்ளது.

தல அஜித் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. வரவேற்பு மட்டுமின்றி வசூலிலும் வாரி குவித்தது. 

இந்த நிலையில் இந்த படம் பிரான்ஸில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் வெளியாகியுள்ளது. அங்கு அஜித் ரசிகர்கள் இந்தியாவில் செய்வது போல் நடனமாடுவது மற்றும் ஸ்கிரினில் அஜித் வரும் பொது அவர் காலில் விழுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்கிரின் சேதமானதால் அங்குள்ள வினியோகஸ்தருக்கு அவர்களுக்கு இந்திய மதிப்பில் 5.5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்துள்ளனர். 

அதனால் இனிமேல் இந்த திரையரங்குகளில் தமிழ் படம் வெளியாகாது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். 
முன்னதாக இந்த திரையரங்குகளில் ‘சர்கார்’, ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ என முன்னணி நட்சத்திரங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.