அஜித் பாடலால் சினிமா வாய்ப்பு! நெகிழும் பார்வையற்ற இளைஞர்! வரிசையில் நிற்கும் யுவன், இமான்

 

அஜித் பாடலால் சினிமா வாய்ப்பு! நெகிழும் பார்வையற்ற இளைஞர்! வரிசையில் நிற்கும் யுவன், இமான்

சமீபத்தில், மேற்குவங்கத்தில் ராணுமோண்டல் என்பவர் அச்சு அசல் லதா மங்கேஷ்கரின் குரலில், அவருடைய பாடலை ரயில் நிலையத்தில் பாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அவருக்கு பாலிவுட் சினிமாக்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன

சமூகவலைதளங்களை பொழுதுபோக்குவதற்காகவும், ஆபாச குப்பைகளை கொட்டுவதற்காகவும் தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், இம்மாதிரியான சமூக வலைத்தளங்களை சரியாக கையாள்பவர்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் பரவுகிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாய் திகழ்கிறார் திருமூர்த்தி   எனும் மாற்றுதிறனாளி. 

சமீபத்தில், மேற்குவங்கத்தில் ராணுமோண்டல் என்பவர் அச்சு அசல் லதா மங்கேஷ்கரின் குரலில், அவருடைய பாடலை ரயில் நிலையத்தில் பாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அவருக்கு பாலிவுட் சினிமாக்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன. ஒரே பாடலின் மூலமாக அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது சமூக வலைத்தளங்கள் தான். தற்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் பாடலைப் பாடியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. திருமூர்த்தி

இந்த வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், திருமூர்த்தியின் தகவல்கள் கிடைக்குமா? அவரை என்னுடைய படங்களில் பாட வைக்க ஆசைப்படுகிறேன் என்று கேட்டிருந்தார். இசையமைப்பாளர் இமான் கேட்ட அடுத்த சில மணி நேரங்களில், அவருடைய இணையதள பக்கத்தில் திருமூர்த்தியின் தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் பாடுவதற்கு திருமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.இமான்

சிறு வயதிலேயே  அம்மாவை இழந்த திருமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாகவே வலம் வந்திருக்கிறார் திருமூர்த்தி. அப்போது, விளையாட்டாக திருமூர்த்தியைப் பாட்டு பாடச் சொல்லி, அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள் நண்பர்கள். பாடலையும் தாண்டி பல தலைவர்களின் குரல்களிலும் அச்சு அசல் அப்படியே திருமூர்த்தியால் பேச முடியுமாம். எங்கோ மூலையில் இருக்கும் ஒரு கிராமத்து பார்வையற்ற இளைஞனின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறது இணையத் தொடர்பு! இசையமைப்பாளர் இமானைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்.