அஜித் – நயன்தாரா கூட்டணியில் ‘வலிமை’! 

 

அஜித் – நயன்தாரா கூட்டணியில் ‘வலிமை’! 

அஜித் நடிக்கவுள்ள தல 60 படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. 

அஜித் நடிக்கவுள்ள தல 60 படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. 

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித், வினோத் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். 

Ajith

 தல 60 என்று பெயரிட்டுள்ள இப்படத்திற்கு வலிமை என்று பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அஜித் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா இந்த படத்திலும் அஜித்தின் மகளாக நடிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானது.