அஜித் நடனத்தை  கலாய்த்த நபருக்கு பதிலடி கொடுத்த விவேக்!

 

அஜித் நடனத்தை  கலாய்த்த நபருக்கு பதிலடி கொடுத்த விவேக்!

டீ.ஆர் அவர்களின் தாளத்திற்கு அஜித்தின் பாடல் ஸ்டெப்களை சிங்க் செய்து எடிட் செய்திருந்தனர். அந்த விடீயோவிற்கு சாதுர்யமாக பதிலளித்துள்ளார் விவேக்.

சமூக வலைத்தளங்களில் மக்களுடன் எப்போதும் கலந்துரையாடி வருகிறார் நடிகர் விவேக். அதோடு மட்டுமில்லாமல் பல விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார். தன்னையே கலாய்த்து மீம்ஸ் போட்டிருந்தாலும் கூட அதையும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பகிர்வார். 

vivek-90

தற்போது ஒரு நபர் ட்விட்டரில் விவேக் அவர்களை டேக் செய்து “இதுக்கு என்ன சொல்வீங்க என்று கேட்டிருந்தார்”. அந்த வீடியோவில் டீ.ஆர் அவர்களின் தாளத்திற்கு அஜித்தின் பாடல் ஸ்டெப்களை சிங்க் செய்து எடிட் செய்திருந்தனர். அந்த விடீயோவிற்கு சாதுர்யமாக பதிலளித்துள்ளார் விவேக். “வாழ்க்கையே ரிதம் தான்; அதை ரசிப்பது நிதம் தான்; அதிலும் இவரைப் பார்ப்பது ஒரு சுகம் தான்!!வாழ்க்கையே ரிதம் தான்; அதை ரசிப்பது நிதம் தான்; அதிலும் இவரைப் பார்ப்பது ஒரு சுகம் தான்!!” என்று ரிப்ளை செய்திருந்தார்.

 

மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங்க் பாடல் சேலஞ்ச் இப்போது ட்ரெண்ட் ஆகி  வருகிறது. இந்த பாடலுக்கு அனிருத் நடனம் ஆடியிருந்தார். அந்த நடனத்திற்கு விவேக்கின் டயலாக்குகளை மிக்ஸ் செய்து எடிட்  செய்திருந்தனர். இதையும் பார்த்த விவேக் “அடப் பாவிங்களா! அனிருத்தையும் விட்டு வைக்கலியா! But semma imagination; semma sync!! என்று நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.