‘அஜித் திராவிட முன்னேற்ற கழகம்’ மதுரை மேயர் தேர்தலில் போட்டி: கொந்தளித்த ரசிகர்கள்!

 

‘அஜித் திராவிட முன்னேற்ற கழகம்’ மதுரை மேயர் தேர்தலில் போட்டி: கொந்தளித்த ரசிகர்கள்!

ரஜினி – கமல் இருவரின் புகைப்படங்களுக்கு நடுவில் விஜய் புகைப்படம் இருப்பது போல அந்த போஸ்டர் அச்சடிக்கப்பட்டிருந்தது

கடந்த சில நாட்களுக்கு முன்பாக  2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக அரசியலில் அதிசயம் நிகழும் அது நடிகர் விஜய்தான் என்று  அச்சடித்த போஸ்டர்கள் மதுரையில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி – கமல் இருவரின் புகைப்படங்களுக்கு நடுவில் விஜய் புகைப்படம் இருப்பது போல அந்த போஸ்டர் அச்சடிக்கப்பட்டிருந்தது. காரணம் நடிகர் கமல் ஹாசனின்  திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி  சமீபத்தில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ttn

அதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ‘ எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் அவர் ஆட்சியின் நான்கு ஐந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள் ஆனால் ஆட்சி தொடர்கிறது நேற்று அதிசயம் நடந்தது இன்றும் அதிசயம் நடக்கிறது நாளையும் அதிசயம் நடக்கும்’ என்றார்.  இதை விஜய் ரசிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு செய்துள்ளார் அஜித்தின் ரசிகரான ரைட்சுரேஷ்.

ttn

 மதுரையில் போஸ்டர் டிசைன் செய்யும் தொழில் செய்து வரும் இவர், பப்ளிசிட்டிக்காக அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் போஸ்டரை அச்சடித்ததுடன்,  மதுரை மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து வரும் அஜித்திற்குச் செய்யும் மரியாதையா இது என்று அவரது ரசிகர்கள் கொந்தளிக்க, விபரீதத்தை உணர்ந்த ரைட்சுரேஷ் மன்னிப்பு கேட்டுள்ளார்.