அஜித் குழு தயாரித்த ட்ரோன் டாக்ஸி: வைரலாகும் வீடியோ

 

அஜித் குழு தயாரித்த ட்ரோன் டாக்ஸி: வைரலாகும் வீடியோ

அஜித்தை தொழில்நுட்ப வழிகாட்டியாய் கொண்ட தக்‌ஷா மாணவர் குழுவின் ட்ரோன் டாக்ஸி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவன ஈர்ப்பை பெற்று வைரலாகி வருகிறது.

சென்னை: அஜித்தை தொழில்நுட்ப வழிகாட்டியாய் கொண்ட தக்‌ஷா மாணவர் குழுவின் ட்ரோன் டாக்ஸி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவன ஈர்ப்பை பெற்று வைரலாகி வருகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப வழிகாட்டியாய் கொண்ட தக்‌ஷா மாணவர் குழு இந்தியாவில் முதல் முறையாக  வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்து சாதனை படைத்தனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தக்‌ஷா குழு வடிவமைத்த பெரிய வடிவிலான ட்ரோன் டாக்ஸி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த பல்வேறு நிறுவனத்தை சார்ந்தவர்கள் இந்த திட்டத்துக்கு நிதி வழங்க முன்வந்திருப்பதாக எம்ஐடி விண்வெளி ஆராய்ச்சித்துறை சார்ந்தவர் தெரிவித்துள்ளார்.

 

70 கிலோ எடைகொண்ட இந்த ட்ரோன் டாக்ஸி, 90 கிலோ எடையுடன் 45 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்டது. இதனை மருத்துவம் முதல் பல்வேறு அவசர உதவிகளுக்கு பயன்படுத்த முடியும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன் டாக்ஸியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.