“அஜித் உங்களுக்கு தான் தல; எனக்கு…” நடிகை வனிதா விஜயகுமார் ஓபன் டாக்!

 

“அஜித் உங்களுக்கு தான் தல; எனக்கு…” நடிகை வனிதா விஜயகுமார் ஓபன் டாக்!

படம் சொல்லும் அளவிற்கு சரியாக ஓடவில்லை. இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. 

நடிகர் விஜய்-யுடன் சந்திர லேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.  தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

இவர்கள் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் சுற்றி திரிந்த நிலையில் ராபர்ட்டை  கதாநாயகராக வைத்து எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தைத் தயாரித்தார். இந்த படம் சொல்லும் அளவிற்கு சரியாக ஓடவில்லை. இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. 

 

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்கு பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார். தற்போது வனிதா தனது இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார். 

ttn

இந்நிலையில் சமீபத்தில் இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள வனிதா நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில், ‘அஜித் உங்களுக்குத் தான் தல, எனக்கு  அஜித் என்றால் சூப்பர் ஜென்டில் மேன். அவர் மனைவிக்கு நல்ல கணவர். குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருப்பவர். அவர் எந்த உயரத்திற்குச் சென்ற போதிலும் அன்றிலிருந்து இன்று வரை என்னிடம் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்’ என்று கூறியுள்ளார்.