அஜித் இயக்குநர், விஜய் தயாரிப்பாளருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்!

 

அஜித் இயக்குநர், விஜய் தயாரிப்பாளருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தளபதி விஜய்யின் ‘சர்கார்’ படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை ரஜினி, விஜய் போன்ற உச்ச நடிகர்களின் படங்களை மட்டுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்சன் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.