அஜித்துக்கு அறிவுரை: சிம்புவை கண்டிக்காத சீமான்

 

அஜித்துக்கு அறிவுரை: சிம்புவை கண்டிக்காத சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அஜித் தனது ரசிகர்களை கண்டித்து வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அஜித் தனது ரசிகர்களை கண்டித்து வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், அஜித் தான் நடிக்கும் பைக் காட்சிகளில் ஹெல்மெட் அணிவது, காரில் பெல்ட் அணிவது என சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறார். தமிழிசை அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தபோது, தான் எந்த கட்சியும் சாராதவர் என அஜித் அறிக்கை விட்டது பாராட்டத்தக்கது. ஆனால் அவரது ரசிகர்கள் ப்ளக்ஸ் வைத்து கீழே விழுந்தது குறித்தும் அவர் பேச வேண்டும். ரசிகர்களின் இந்த கொண்டாட்ட மனநிலையை அவர் கண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சீமான் அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார். சமீபத்தில் சிம்பு தன் ரசிகர்களை தனக்கு பாலாபிஷேகம் செய்ய சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அஜித்துக்கு அறிவுரை வழங்கிய சீமான், தன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் இவ்வாறு பேசியது குறித்து எதுவும் சொல்லாதது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.