அஜித்தின் விஸ்வாசம் படம் வெளிநாட்டில் வசூல் செம அள்ளு!

 

அஜித்தின் விஸ்வாசம் படம் வெளிநாட்டில் வசூல் செம அள்ளு!

நடிகர் அஜித்தின் பொங்கல் ரிலீஸான விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை அள்ளி குவித்து வருகிறது

சென்னை: நடிகர் அஜித்தின் பொங்கல் ரிலீஸான விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை அள்ளி குவித்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கல் தின விருந்தாக திரைக்கு வந்தது. இந்தப் படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாட்டிலும் விஸ்வாசம் படத்துக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. 

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இலங்கை, அரபு நாடுகள், மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியான நாளில் இருந்து கிட்டத்தட்ட 2 வாரங்களாக வசூலில் சாதனை படைத்து வருகிறது.

விஸ்வாசம் வெளியான அதேநாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட வந்தது. அந்தப் படமும் வெளிநாடுகளில் சக்கைப்போடு போடுகிறது.ஆனால் பேட்டக்கு இணையாக சளைக்காமல் விஸ்வாசமும் செம வசூல் எனக் கூறப்படுகிறது.வெளிநாடுகளில் மட்டும் விஸ்வாசம் படம் இப்போது வரை 30 கோடி ரூபாய் வரை வசூல் நடத்தியிருக்கும் என தெரியவந்துள்ளது .