அஜித்தின் வலிமை படத்தின் கதை இதுவா? – வெளியான ஒன்லைன்

அஜித்தின் வலிமை படத்தின் கதை இதுவா? – வெளியான ஒன்லைன்

நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை படத்தின் கதை பற்றிய கிசுகிசு இணைய செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வேகமாகப் பரவி வருகிறது. இந்த படத்தில் சிலை கடத்தல் விவகாரத்தை மையமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திலும் பாசக்கார அப்பாவாகவும் கடமை தவறாத விரைப்பான போலீஸ் அதிகாரியாகவும் அஜித் நடிக்கிறாராம். படத்தில் ஃபைட் சீன் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் கலைஞர்களை எல்லாம் இறக்குமதி செய்துள்ளார்களாம். மேலும் பைக் சாகம், சேஸ் என்று அஜித் ரசிகர்களை கண்டிப்பாக படம் ஈர்க்கும் என்கிறார்கள்.

h-vinoth

படத்தின் இயக்குநர் வினோத் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படம் எடுத்தவர் என்பதால் காவல் துறை சார்ந்த உண்மை சம்பவங்களை மனதில் கொண்டு தத்ரூபமாக எடுத்து வருகிறார் என்று படக் குழுவினர் கூறி வருகின்றனர்.
சிலை கடத்தல் என்ற ஒன்லைன் நமக்கு பொன் மாணிக்கவேலை நினைவுபடுத்துகிறது. சிலை கடத்தல் தொடர்பாக தமிழகத்துக்கு அதிர்ச்சி தகவல் பல கொடுத்தவர் பொன் மாணிக்கவேல். குஜராத் மற்றும் வெளிநாடுகளிலிருந்த தமிழக சிலைகளை எல்லாம் திருப்பிக் கொண்டுவந்தவர். இதற்காக அவர் பட்ட கஷ்டம், அரசு தரப்பிலிருந்து அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி அதிகம். இதை எல்லாம் இந்த படத்தில் காட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.