அஜித்தா..? விஜயா..?: ரவுடி பேபியின் அசத்தல் பதில்

 

அஜித்தா..? விஜயா..?: ரவுடி பேபியின் அசத்தல் பதில்

தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் ஒரே நேரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகை சாய் பல்லவி அசத்தலான பதில் கூறியுள்ளார்.

சென்னை: தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் ஒரே நேரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகை சாய் பல்லவி அசத்தலான பதில் கூறியுள்ளார்.

‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம், தெலுங்கு, தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழில் சாய் பல்லவி நடித்த முதல் திரைப்படமான ‘கரு’ எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ படத்தின் மூலம் அராத்து ஆனந்தியாக நடித்துள்ள சாய் பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

saipallavi

இந்நிலையில், சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், தல அஜித்துடன் ஒரு மாஸ் படம், தளபதி விஜய்யுடன் காதல் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த படத்தை தேர்ந்தெடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, இருவருமே பெரிய நட்சத்திரங்கள், யாருடைய படத்தில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதை தேர்ந்தெடுப்பேன் என கூறியுள்ளார்.

‘மாரி 2’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.