அஜயன் பாலாவின் ‘தமிழ் சினிமா வரலாறு’ பாகம் 1 : பாரதிராஜா நேரில் வாழ்த்து!

 

அஜயன் பாலாவின் ‘தமிழ் சினிமா வரலாறு’ பாகம் 1 :  பாரதிராஜா நேரில் வாழ்த்து!

சாதனை புரிந்த திரைப்படங்களைப் பற்றிய  சுவாரசியமான தகவல்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. 

அஜயன்பாலா  எழுதிய   ‘தமிழ்  சினிமா  வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகம் குறித்து இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 எழுத்தாளரும்,  திரைப்படத்துறையில் பல வெற்றிப் படங்களின்  திரைக்கதை வசனகர்த்தா இருந்துள்ள  அஜயன்பாலா  சமீபத்தில்  ‘தமிழ்  சினிமா  வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவானது கடந்த 2 ஆம் தேதி தி.நகர்  சர். பி.டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இதில்   நடிகர் சிவக்குமார் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், நடிகர் சங்க தலைவர் திரு. நாசர், நடிகர். ராஜேஷ், இயக்குநர் கோபி நயினார், ஒளிப்பதிவாளர்-இயக்குநர் செழியன், கவிஞர் குட்டி ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ttn

சுமார் 200 க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன், 600 பக்கத்தில் மிகப்பெரிய அளவில், கண்ணைக் கவரும் விதத்தில் தமிழ் திரைப்பட உலகின் ஒரு மிக முக்கிய  ஆவணமாகவிருக்கும் இந்நூலில்,   மௌனப் படங்கள் துவங்கி  1947 வரை வெளியான அனைத்து திரைப்படங்களின் பட்டியல் கால வரிசைப்படித் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டிலும் சாதனை புரிந்த திரைப்படங்களைப் பற்றிய  சுவாரசியமான தகவல்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் இதுகுறித்து எழுத்தாளர் அஜயன்பாலனை பாராட்டி பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உன்னுடைய தமிழ் சினிமா வரலாறு நூல் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பெருமைக்குரியவர்கள்   முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டியது,  தவிர்க்க இயலாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியவில்லை.  தமிழ் சினிமா வரலாறு நூலின் முதல் பாகம் 1916 முதல் 1947 வரையில் தற்போது வெளிவந்து இருக்கிறது .அடுத்த பாகம் 1948 முதல் 1977 வரை வெளிவர இருப்பதாக சொல்லியிருக்கிறாய். இதுவரை வந்த படங்களின் வரலாறும் மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் வரலாற்றையும் இந்நூலின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகமாக வெளிவரும் என்று நம்புகிறேன்.  இந்த புத்தகம் சினிமாவின்  முழுமையான தகவல் களஞ்சியமாக இருக்கும் என்பது உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.