அச்சு அசலாக எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி …ஆச்சரியப்பட வைக்கும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் இதோ!

 

அச்சு அசலாக எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி  …ஆச்சரியப்பட வைக்கும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் இதோ!

எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபத்தில் தலைவி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி தனது  ஃபஸ்ட்லுக் போஸ்டரை  டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எம்ஜிஆராக மாறியுள்ள அவர், தலைவி படத்தின் டீசர் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட சிலர், சார் செம்ம… அப்படியே எம்ஜிஆர் மாதிரி இருக்கீங்க என்று  கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.