அசைவ பிரியர்களுக்கு அட்டகாசமான செய்தி.. ‘சூப்’ எடுங்க கொண்டாடுங்க..!

அசைவ பிரியர்களுக்கு அட்டகாசமான செய்தி.. ‘சூப்’ எடுங்க கொண்டாடுங்க..!

அசைவ பிரியர்களுக்கு குளிர் காலம் வந்தாலே கொண்டாட்டம்தான். ஜில்லென்று அடிக்கிற குளிருக்கு சிக்கன், மட்டன் சூப் வகைகளை சூடாக குடிக்கிறது இருக்கிற பரவசம் இருக்கே… அடடா! இந்த லிஸ்டில் மீன்களையும் சேர்த்துக்கலாம்.சுவைக்காக மட்டுமல்ல ; மற்ற இரண்டையும் விட மீன்களில் ஆரோக்கியம் அதிகம். மீன் கால்சியம்,வைட்டமின் டி , பாஸ்பரஸ், மினெரல்ஸ், மெக்னீசியம், பொட்டாசியம், ஐயன், ஜின்க், ஐயோடின் போன்றவற்றால் நிரம்ப பெற்றுள்ளது. 

soup

இதில் உடலுக்கும் மூளைக்கும் தேவையான முக்கிய சத்தான ஒமேகா-3 ஃபாட்டி அசீட்ஸ் போன்றவை உள்ளன இதனை குளிர்காலத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் நாவின் சுவை அரும்புகளுக்கும் உடல் நலனுக்கும் அதிக நன்மைகளை பயக்கும்!

மீன் உங்கள் சருமம் வறண்டு போகாமலும் பாதுகாக்கும், மேலும் அதை உண்பதால் உங்களின் முடி வளர்ச்சிக்கும் அதிக நன்மைகள் தரும். தூக்கமின்மையும் போக்கும் தன்மை மீனிற்கு உண்டு.சால்மன் எனப்படும் ஒருவகை மீனில் மோனோசாட்டுரெட்டட் கொழுப்பு, மற்றும் ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட் இருப்பதனால் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடும் உங்கள் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். 

fish

பொதுவாகவே, குளிக்காலத்தில் பகல் நேரம் மிகவும் கம்மி என்பதால் உங்களுக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி பெரிதும் கிடைக்காமல் போய்விடும் அதனால் தான் நமக்கு குளிர்காலங்களில் அதிகமான நோய்த்தொற்று பரவுகிறது அதுமட்டுமல்லாமல் போதிய சூரிய சக்தி கிடைக்காததால் மனிதரின் மனதையும் பாதிக்குமாம் அதனை சீசனல் அபக்ட்டிவ் டிசார்டர்(Seasonal Affective Disorder SAD)என்று அழைக்கப்படுகிறது. அனால் இந்த குறைபாட்டை நாம் மீன் சாப்பிட்டு சரி செய்து கொள்ளலாம். 

d

மீன்… சளி, சுவாச கோளாறுகள் இன்னும் இதர நோய் தொற்றுகளையும் குணமாக்கும் திறன் கொண்டது. இதுமற்றுமன்றி ஆய்வுகள் கூறியதாவது,”ரத்தத்தில் அதிக அளவு பாலி அன் சாட்டுரேட்டட் ஃபாட்டி ஆசிடுகளான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இருந்தால் அவை ஆஸ்துமா, ரஹினிட்டிஸ்(Rhinitis) போன்றவவை வருவதற்கு வாய்ப்புகள் குறைவு”  மேலும் அவை குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலி,தசை வலி, மற்றும் ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளையும் குறைக்கும். 

nose

இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய மீனை நாம் நம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு ஆரோக்யம், இந்தக் குளிருக்கும் செம்மையை இருக்கும்.