அசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தெலுங்கு நடிகர்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

அசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தெலுங்கு நடிகர்:  உற்சாகத்தில் ரசிகர்கள்!

மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக மாறியுள்ள அசுரன் திரைப்படத்தை நடிகர் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார். 

dhanush

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

asuran

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.இதையடுத்து அசுரன் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர். 

 

இந்நிலையில் அசுரன் திரைப்படத்தைத் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அசுரன் , உண்மையான மற்றும் தீவிரமான திரைப்படம். சிறந்த படம்.வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.