அசுரன் படத்தில் வரும் வில்லன் கேரக்டர் ஸ்டாலினுக்கு பொருந்தும்- அமைச்சர் ஜெயக்குமார்

 

அசுரன் படத்தில் வரும் வில்லன் கேரக்டர் ஸ்டாலினுக்கு பொருந்தும்- அமைச்சர் ஜெயக்குமார்

அசுரன் படத்தில் வரும் வில்லன் கேரக்டர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அசுரன் படத்தில் வரும் வில்லன் கேரக்டர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

நாங்குநேரியில் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டாலின் ஜமீன் தோரணையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம். அந்த படத்தில் வரும் வடக்கூரான் வில்லன் கேரக்டர் ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்தும். 7 பேர் விடுதலையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பபட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது.

Jayakumar

தமிழகத்தில் தேர்தல் என்று வந்தால் சாதனைகளுக்கும் கட்சியின் கொள்கைகளுக்கும் வாக்கு அளித்த நிலையை மாற்றி  திருமங்கலம் பார்முலாவை அமல் படுத்தியதே திமுக தான். திருமங்கலத்தில் கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்து  செயற்கையான வெற்றியை திமுக பெற்றது. தமிழகத்தில் திமுக பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற வேண்டும் என செயல்பட்டுவருகிறது. திமுக எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” என்று கூறினார்.