‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை!

 

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை!

இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டது.

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம்  அசுரத்தனமான வெற்றியை பெற்றது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகிய  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டது.

 

இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷ் படங்களில் முக்கிய இடத்தை பிடித்த இந்தப்படமானது 100 ரூபாய் வசூலை வாரி குவித்தது.

ttn

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில்  ரீமேக்காகிறது. தனுஷ் நடித்த  சிவசாமி வேடத்தில் வெங்கடேஷும் மஞ்சு வாரியர் கேரக்டரில் பிரியாமணியும்  நடித்து வருகிறார்கள். தற்போது  இப்படத்தில் அமலா பால் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ttn

அதாவது தனுஷின் இளமை காலத்தில் ஜோடியாக வரும் அம்மு அமிராமி கதாபாத்திரத்தில் தான் அமலா பால் நடிக்கவுள்ளாராம். அடுத்த வாரம் அமலா பால் [ படிப்பில்  கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.