அசுரன் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

 

அசுரன் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது   பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

அசுரன் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

அசுரன் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

asuran

வடசென்னையின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் மீண்டும்  திரைப்படம்  அசுரன்.  கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

asuran

இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாதி அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை எந்தவொரு சாதியின் பெயரை குறிப்பிடாமலே அழுத்தமாகக் கூறியிருந்தார் வெற்றிமாறன். இதனால் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்த படத்தை பார்த்துத் திரைக் கலைஞர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அசுரன் படத்தின் சாட்டிலைட்  உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து  தங்களது  டிவிட்டர் பக்கத்தில் அசுரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.