‘அசுரன்’ சினிமா விமர்சனம்!  தனுஷூக்கு அடுத்த தேசிய விருது!

 

‘அசுரன்’ சினிமா விமர்சனம்!  தனுஷூக்கு அடுத்த தேசிய விருது!

பூமணியின் ‘வெக்கை’யை கனகச்சித்தமாக திரைமொழியில் அசுரனாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.  இத்தனைக்கும் வெக்கை, நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கிற கதை கிடையாது. காலத்தைத் துண்டாக்கி, கதையைப் பிசிறியடித்து, கதைமாந்தர்களை முழுக்கவே விசிறி அடித்திருப்பார் பூமணி. படம் முழுக்கவே எழுத்தாளர், இயக்குநர் சுகா, வெற்றிமாறனின் உழைப்பு தெரிகிறது. ‘வெக்கை’ புதினத்தை, திரைவடிவமாக்குவதற்கு முனைந்ததே துணிச்சல்தான்.  

பூமணியின் ‘வெக்கை’யை கனகச்சித்தமாக திரைமொழியில் அசுரனாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.  இத்தனைக்கும் வெக்கை, நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கிற கதை கிடையாது. காலத்தைத் துண்டாக்கி, கதையைப் பிசிறியடித்து, கதைமாந்தர்களை முழுக்கவே விசிறி அடித்திருப்பார் பூமணி. படம் முழுக்கவே எழுத்தாளர், இயக்குநர் சுகா, வெற்றிமாறனின் உழைப்பு தெரிகிறது. ‘வெக்கை’ புதினத்தை, திரைவடிவமாக்குவதற்கு முனைந்ததே துணிச்சல்தான்.  

dhanush

சிவசாமி (தனுஷ்) தன்னுடைய இளைய மகன் சிதம்பரத்தை (கென் கருணாஸ்) அழைத்துக் கொண்டு நடுக்காட்டில் பதுங்கி பதுங்கி செல்லும் காட்சியுடன் படம் துவங்க ஆரம்பிக்கும் போதே பார்வையாளர்களிடையே பதற்றம் பரவ ஆரம்பமாகிவிடுகிறது. அதன் பின்னர் விரியும் பிளாஷ்பேக் காட்சிகளில் அழகான மனைவி மஞ்சு வாரியர், இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் தனுஷ். இந்த குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கிறார் மஞ்சு வாரியாரின் அண்ணன் பசுபதி. வடக்கூர், தெற்கூர் என இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது ஊர். தெற்கூரில் இருக்கும் அனைத்து விவசாய நிலங்களையும் ஒவ்வொன்றாக மிரட்டி வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார் ஆடுகளம் நரேன். அந்த நிலத்தில் மிக பிரமாண்டமாய் சிமெண்ட் பேக்டரி கட்ட வேண்டும் என்பது அவரது திட்டம். ஆனால் தனுஷ் மட்டும் தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தை தரமாட்டேன் என மல்லுக்கு நிற்கிறார். ஒவ்வொரு விதத்திலும் நிலத்தை வாங்குவதற்காக தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் ஆடுகளம் நரேனிடம், தனுஷின் மூத்த மகன் முருகன் தைரியமாக தட்டி கேட்கிறார். அவரை போலீஸ் பிடித்துச் செல்ல, ஊரில் இருக்கும் அனைவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் தனுஷ். அதன் பிறகு முருகன் வீட்டிற்கு திரும்பினாலும், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். 
மகனைக் கொன்றவர்களை பழி தீர்க்க விருப்பம் இல்லாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கிறார் தனுஷ். அண்ணனைக் கொலைச் செய்தவர்களை பழி தீர்க்காமல், அப்பா கோழையாக இருப்பதை பார்த்து இளைய மகன் சிதம்பரம் கோபத்தில் செய்யும் காரியத்தால் தனுஷுன் குடும்பமே தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி எப்படி ஜெயித்து கம்பீரமாக தனுஷ் எழுகிறார் என்பது தான் மீதி கதை.

dhansuh

வயதான கதாபாத்திரத்தில் அப்படியே பாந்தமாய் பொருந்தி போகிறார் தனுஷ். நடிப்பதை எல்லாம் ஓரம்கட்டி பரண் மேல் எறிந்து விட்டு தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவே வலம் வரலாம். ஒவ்வொரு காட்சிக்கும் அத்தனை கச்சிதமான இசையமைப்பு. பகல், இரவு, இருட்டு, காடு என்று சுழற்றியடித்திருக்கிறது வேல்ராஜுன் ஒளிப்பதிவு. படத்திற்கு பெரிய பலமாகவும் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நீளாதா என்று எதிர்பார்க்க வைக்கிறது பிரகாஷ்ராஜுன் கதாபாத்திரம். படத்தின் முதல் பாதி முழுக்கவே பார்வையாளர்களை சீட்டின் நுனியிலேயே அமர வைத்திருப்பதில் பெரும்பங்கு இசையும், படத்தின் எடிட்டிங்கும் பார்த்துக் கொள்கிறது. கென் கருணாஸ் நம்பிக்கையான புதுவரவு. காட்டுக்குள் புகுந்த யானையின் தடம் வழிநெடுக காணக்கிடைப்பதைப் போல பசுபதியின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு பலம். படத்தின் இறுதி காட்சியில் தனுஷ் பேசும் வசனங்களுக்கு மொத்த திரையரங்கும் கைதட்டுகிறது. அந்த கைத்தட்டல்கள் ஒன்றாய் சேர்ந்து ‘அசுரனு’க்காக உழைத்த அத்தனைப் பேருக்கும் தான்!