அசுரன் சக்ஸஸ் மீட்… கர்ணன் படத்திற்கு பிரேக் சொல்லி விட்டு ஆஜரான தனுஷ்

 

அசுரன் சக்ஸஸ் மீட்… கர்ணன் படத்திற்கு பிரேக் சொல்லி விட்டு  ஆஜரான தனுஷ்

100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.இதையடுத்து அசுரன் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர். 

 

இந்நிலையில் அசுரன் 100 நாட்களை தாண்டி  வெற்றிகரமாகத் திரையில் ஓடியதற்காகச்  சென்னை ரஷ்யன் கல்சரில்  அசுரன் படக்குழுவினர் ஹேப்பி மீட் ஒன்றை ஏற்பாடு செய்து கலந்துகொண்டுள்ளனர்.  இவ்விழாவுக்காக தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் வருகை புரிந்துள்ளனர். 

 

முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்  நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பு நெல்லையில்  நடைபெற்று வரும் நிலையில் தற்போது பிரேக் எடுத்துக்கொண்டு தனுஷ் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.