அசாமில் 5 பேர் சுட்டுக் கொலை: வலுக்கும் போராட்டம்-தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் தீவிரம்

 

அசாமில் 5 பேர் சுட்டுக் கொலை: வலுக்கும் போராட்டம்-தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் தீவிரம்

அசாம் மாநிலத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் நேற்று மாலை 7 மணியளவில் மேற்கு வங்க மாநிலத்தினர் உள்பட பொதுமக்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிற மாநிலத்தவர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தும், அசாம் அரசுக்கு எதிராக போராடும் உல்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கபப்டுகிறது. ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என உல்பா இயக்கதினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அசாம் – அருணாச்சலப்பிரதேச எல்லையில், தேடுதல் வேட்டையை ராணுவம் முடுக்கி விட்டுள்ளது. அதேபோல், இந்தோ- மியான்மர் எல்லையிலும் அசாம் ரைபிள் படைப்பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மேற்குவங்க மாநிலத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வங்க அமைப்புகள் சில, 24 மணி நேர பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதேசமயம், அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஊர்வலம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.