அசாமில் மீண்டும் பறக்கும் பாஜக கொடி! – Exit Poll முடிவு

 

அசாமில் மீண்டும் பறக்கும் பாஜக கொடி! – Exit Poll முடிவு

அசாம் மாநிலத்தில் மொத்தமாக 126 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டியே நிலவுகிறது. மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக மார்ச் 27ஆம் தேதி 47 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும், இறுதிக் கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாமில் தற்போது பாஜக ஆட்சி தொடர்கிறது.

அசாமில் மீண்டும் பறக்கும் பாஜக கொடி! – Exit Poll முடிவு

இன்று 7 மணிக்கு மேலே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதன்படி தற்போது அசாம் மாநில கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அனைத்து முடிவுகளுமே பாஜகவே ஆட்சியைத் தொடரும் என கூறியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் பின்வருமாறு:

அசாமில் மீண்டும் பறக்கும் பாஜக கொடி! – Exit Poll முடிவு

சிவோட்டர்-ஏபிபி முடிவு:

பாஜக – 58-71 இடங்கள்

காங்கிரஸ் – 53-66 இடங்கள்

மற்றவை – 0-5 இடங்கள்

ரிபப்ளிக்-சிஎன்எக்ஸ் முடிவு:

பாஜக – 78-84 இடங்கள்

காங்கிரஸ் – 40-50 இடங்கள்

மற்றவை – 1-3 இடங்கள்

Image

டுடே சாணக்யா முடிவுகள்:

பாஜக – 61-79 இடங்கள்

காங்கிரஸ் – 47-65 இடங்கள்

இந்தியா டுடே முடிவுகள்:

பாஜக- 75-85 இடங்கள்

காங்கிரஸ் – 40-50 இடங்கள்

மற்றவை – 1 இடங்கள்