அசர விட்டு அடி கொடுத்த அமைச்சர் உதயகுமார்… செம்ம டென்ஷனில் செல்லூர் ராஜூ..!

 

அசர விட்டு அடி கொடுத்த அமைச்சர் உதயகுமார்… செம்ம டென்ஷனில் செல்லூர் ராஜூ..!

மதுரையில் யார் கெத்து என்பதில் வருவாய்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமாருக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கும் அக்கப்போரே நடந்து வருகிறது.

மதுரையை சேர்ந்த அமைச்சர்களான  உதயகுமாருக்கும், செல்லூர் ராஜுக்கும் எப்போதும்  ஏழாம் பொருத்தம் தான்.

மதுரையில் யார் கெத்து என்பதில் வருவாய்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமாருக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கும் அக்கப்போரே நடந்து வருகிறது. மதுரையில் ஆவின் சேர்மன் பதவியில் இருந்த  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பி. ராஜாவை  தேனிக்கே விரட்டிவிட்டனர். அதனால், மதுரைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு தரப்பு தங்கத்தை தலைவராக கொண்டு வர காய் நகர்த்தியது. 

ஆனால் அதற்கான தேர்தல், செப்டம்பர் 2021ல் தான் நடக்கும் என அசால்ட்டாக  இருந்து விட்டது செல்லூர் ராஜூ தரப்பு. ஆனால், ‘அசரும்போதே அடிச்சிடணும்’ எனக் காத்திருந்த  அமைச்சர் உதயகுமார் முதல்வர், எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும் முன் அவரிடம் அனுமதி வாங்கி தன் ஆதரவாளரான தமிழரசனுக்கு, மதுரை ஆவின் இடைக்கால தலைவர் பதவியை வாங்கிக்  வாங்கி கொடுத்துட்டார் 

ஏற்கனவே அமைச்சராக இருந்த, மணிகண்டனின் தகவல் தொழில்நுட்ப துறையை00 கூடுதல் பொறுப்பாக, உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. இப்போது முதல்வர் வெளிநாட்டு பயணத்திலும் இடம் பிடித்து விட்டார். இதனால் மேலும் முதல்வர் எடப்பாடியுடன் நெருக்கமாகி விட்டார். இன்றைய கணக்குப்படி மதுரை அரசியலில், உதயகுமார் கை ஓங்கி இருக்கிறது.