அசத்தலான சுவையில் கத்தரிக்காய் காரக்கறி

 

அசத்தலான சுவையில் கத்தரிக்காய் காரக்கறி

தேவையான பொருட்கள்
பிஞ்சு கத்திரிக்காய் -1/4கிலோ
தக்காளி -1
சின்ன வெங்காயம்-10
பூண்டு – 5பல்
மிளகாய் தூள் – 1டீஸ்பூன்
மல்லித்தூள் – 1டீஸ்பூன்
சோம்பு – 1டீஸ்பூன்
கசகசா -1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -3 டீஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

brinjal

செய்முறை
சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, சோம்பு, மிளகு, கசகசா, தேங்காய் துருவல் என அனைத்தையும் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய் ஆகியவற்றை நன்றாக வதக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து விட்டு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக திக்காக வரும் வரை கொதிக்க விட வேண்டும். நல்லெண்ணெய் உபயோகிப்படுத்த சுவை அபாரமாக இருக்கும்.
வெஜிட்டபிள் பிரியாணிக்கும், சிக்கன் பிரியாணிக்கும் தொட்டுக் கொள்ள பொருத்தமான சைட் டிஷ்ஷாக இருக்கும்.