அசத்தலாக நடனமாடும் கோல்டன் ரெட்ரீவர் நாய் – வைரல் வீடியோ உள்ளே!

 

அசத்தலாக நடனமாடும் கோல்டன் ரெட்ரீவர் நாய் – வைரல் வீடியோ உள்ளே!

கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று அசத்தலாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

டெல்லி: கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று அசத்தலாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நாய்கள் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் வேட்டைக்காரர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சந்திரனைப் பார்க்கும்போது அல்லது தனக்கு பிடித்த விஷயங்களை பார்க்கும்போது நாய்கள் சிறந்த பாடகர்களாக மாறுகின்றன. ஆனால் நாய்கள் நடனம் ஆடுமா? அதில் நாய்கள் சிறந்தவர்களா? பாடல்கள் அல்லது இசையின் தாளத்தை நாய்களால் உணர முடியுமா? அதற்கான பதில் ஒரு வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

அதில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்று இசைக்கு ஏற்ப அட்டகாசமாக கால்களை குதித்து நடனமாடுகிறது. அந்த நாய் நல்ல உற்சாகத்தோடும், மகிழ்ச்சியுடனும் இருப்பது அதன் நடனத்தில் வெளிப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் வைரலாக பகிரப்படுகிறது.