அசடு வழிந்த டாக்டர் ராமதாஸ்! நக்கல் செய்த நிருபர்கள்!

 

அசடு வழிந்த டாக்டர் ராமதாஸ்!  நக்கல் செய்த நிருபர்கள்!

இவர் இப்போ ஆளுங்கட்சிக் கூட்டணியிலே தானே இருக்காரு? மதுவிலக்கு, புவி வெப்பமயமாதல் பற்றி எல்லாம் நேர்லேயே முதல்வர்கிட்டே பேசலாமே… இப்போ தான் ஜெயலலிதா கிடையாதே… எடப்பாடியுமா இவரைப் பார்க்க மாட்டாரு?

தமிழகத்தின் அரசியல் களம், தனியார் சேனலின் காமெடி தர்பார் நிகழ்ச்சிகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் போல… இன்று சென்னை சென்ட்ரலில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தனர். 

சுபஸ்ரீயின் உயிர் தியாகத்தில் சாலைகளில் எல்லாம் பேனர்களை வைத்து மாஸ் காட்டாமல் துண்டு பிரசுரங்களைக் கொடுத்தும், பதாகைகளையும் கைகளில் ஏந்தியும் போராட்டத்தை நடத்தினார்கள். நல்ல விஷயம் தான். 

ஆனால், அதன் பிறகு டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியது தான் அரசியல் கேலி கூத்தின் உச்சம். ‘ பருவநிலை மாற்றத்தை தடுக்கவும், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மது விலக்கு போராட்டத்தை பாமக கட்சியினர் என்றுமே கைவிடமாட்டார்கள். எப்போது முழுமையாக அரசு மதுவிலக்கை சட்டமாக இயற்றுமோ அது வரை எங்கள் போராட்டம் நீடிக்கும் ” என்று பேசினார். பக்கத்தில் இருந்த ஆர்வக்கோளாறு நிருபர் ஒருத்தர், ‘ஏன்ணா… இவர் இப்போ ஆளுங்கட்சிக் கூட்டணியிலே தானே இருக்காரு? மதுவிலக்கு, புவி வெப்பமயமாதல் பற்றி எல்லாம் நேர்லேயே முதல்வர்கிட்டே பேசலாமே… இப்போ தான் ஜெயலலிதா கிடையாதே… எடப்பாடியுமா இவரைப் பார்க்க மாட்டாரு?’ என்று சீண்டிக் கொண்டே இருந்தார்.

ஆர்வக்கோளாறு நிருபரின் கையைப் பிடித்து இழுத்த மூத்த நிருபர் ஒருவர், ‘ஏற்கெனவே அவருக்கு பத்திரிக்கையாளர்களைப் பிடிக்காது. ஜாதி கூட்டங்களில் எல்லாம் பத்திரிக்கையாளர்களைத் தரக்குறைவாக, கம்பீரமாக பேசிவிட்டு, பின்  அது நான் இல்லை…என்னுடைய அட்மின் செய்த வேலை ரகத்தில், அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுப்பார். அவரு தான் ஏதோ சம்பிரதாயத்துக்கு கூட்டணியில இருந்துக்கிட்டே, மதுவிலக்கு தொடரும் வரையில் அரசை எதிர்த்து போராடுவோம்னு இங்கே வந்து பேசுறாருன்னா… நீயும் சந்தேகம் கேட்கறியே… என்று ராமதாஸுக்கு கேட்கிற மாதிரியே சத்தமாகவே புது நிருபருக்கு க்ளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

அன்புமணி ராமதாஸ்

இப்போது எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்று நினைவு வந்திருக்கும் போல… அதன் பிறகு இடைத்தேர்தல் பற்றியெல்லாம் எதுவுமே பேசாமல், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக-வுடனே கூட்டணி வைத்துக் கொள்ளவோம்’ என்று அசடு வழிந்த படியே பிரஸ் மீட்டை முடித்து வைத்தார் மருத்துவர் அய்யா! (அன்புமணிக்கிட்டே பத்திரிக்கையாளர்களை திட்டிக்கிட்டே வீட்டுக்கு போயிருப்பாரோ?!)