அங்க 10 டாலர் விலை ஏறினா, இங்க பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயரும்

 

அங்க 10 டாலர் விலை ஏறினா, இங்க பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயரும்

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 அமெரிக்க டாலர் உயர்ந்தால், நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயரும் என எதிர்பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று சவுதியின அராம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தியின் 2 ஆலைகளில் விமான தாக்குதல் நடந்தது. இதனால் சவுதியின் 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. நேற்று மட்டும் கச்சா எண்ணெய் விலை 6 டாலர் (பேரலுக்கு) உயர்ந்தது.  இந்த திடீர் விலை உயர்வால் இந்தியா போன்ற அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

அராம்கோ ஆலை தாக்குதல்

நம் நாடு மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகத்தான் பூர்த்தி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 டாலர் உயர்ந்தால் இறக்குமதி செலவினம் 1500 கோடி டாலர் கூடும். தற்போது பொருளாதார நிலைமை மோசமாக இருக்கும் நிலையில்,  இந்த விலை உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 உயர்ந்தால், நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயரும் என எதிர்பார்க்கரலாம் என மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என கூறினாலும், கடைசியாக பாதிக்கப்படுவது யார் என்றால் சாமானிய மனிதர்கள்தான்.