அங்க எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்க சொந்த விருப்பப்படி பெங்களூருவில் இருக்கோம்….. மத்திய பிரதேச காங்கிரஸ் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் தகவல்..

 

அங்க எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்க சொந்த விருப்பப்படி பெங்களூருவில் இருக்கோம்….. மத்திய பிரதேச காங்கிரஸ் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் தகவல்..

அங்கு எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெங்களூருவில் எங்க சொந்த விருப்பப்படி இருக்கிறோம் என மத்திய பிரதேச காங்கிரஸ் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் தெரிவித்தனர்.

[17:09, 3/17/2020] Gps: கடந்த வாரம் காங்கிரசின் பிரபல முகமாக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். சிந்தியா பா.ஜ.க.வுக்கு இணைவதற்கு முன்னதாக அவருக்கு விசுவாசமான 22 எம்.எல்.ஏ.க்கள் தனி விமானத்தில் பெங்களூரு சென்றனர். அதன் பிறகுதான் சிந்தியா பா.ஜ.க.வுக்கு தாவும் காட்சிகள் அரங்கேறியது. அதன்பிறகு பெங்களூருவில் இருந்தபடியே எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். மேலும் ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தலைவர்கள் வாயிலாக சபாநாயகருக்கு அனுப்பினர்.

ஜோதிராதித்ய சிந்தியா

இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் சிறைப்பிடித்து வைத்திருப்பதாக முதல்வர் கமல் நாத் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் இதனை பா.ஜ.க. கடுமையாக மறுத்தது. இந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூருவில் இருக்கும் 22 காங்கிரஸ் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, யாராலும் நாங்கள் சிறைபிடிக்கப்படவில்லை எங்களது சொந்த விருப்பப்படிதான் பெங்களூருவில் இருக்கிறோம். மத்திய பிரதேசத்தில் நாங்கள் பாதுகாப்பாக இல்லை என தெரிவித்தனர்.

முதல்வர் கமல் நாத்

கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ராஜ்வர்தன் சிங் கூறுகையில், நாங்கள் மொத்தம் 23 பேர் இதில் 22 பேர் பெங்களூருவில் இருக்கிறோம். கமல் நாத் அரசுடன் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை அதனால் ராஜினாமா செய்தோம். அவ்வாறு செய்ய யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை. எம்.எல்.ஏ.க்கள் ஆகிய நாங்கள் எங்கள் தொகுதிக்கு வேலை செய்யமுடியவில்லை என்றால் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்து மக்களின் கோபத்தை ஏன் எதிர்கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.