அங்கன்வாடி மையத்தில் மகளை சேர்த்த மாவட்ட ஆட்சியர்…. குவியும் பாராட்டுக்கள்

 

அங்கன்வாடி மையத்தில் மகளை சேர்த்த மாவட்ட ஆட்சியர்…. குவியும் பாராட்டுக்கள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தனது மகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பதற்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தனது மகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பதற்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சந்தீப் நந்தூரி. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சந்தீப் நந்தூரி தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

அதனை தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டார். செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி பிரச்னை உள்ளிட்டவைகளை சாதுர்யமாக கையாண்டு நெல்லை மாவட்ட மக்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில், ஷில்பா பிரபாகர் தனது 3 வயது மகள் கீதாஞ்சலியை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். இதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் அவர் முன்னுதாரணமாக மாறியுள்ளார் என பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.