அக் 13ம் தேதி ஐபோன் 12 – அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டம்?

 

அக் 13ம் தேதி ஐபோன் 12 – அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டம்?

வரும் அக்டோபர் 13ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

அக் 13ம் தேதி ஐபோன் 12 – அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டம்?

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் நிலவி வரும் முடக்க நிலையால் ஐபோன் 12 ஐ அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில் செப்டம்பரில் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 13ம் தேதி ஐபோன் 12ஐ அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக் 13ம் தேதி ஐபோன் 12 – அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டம்?

அதன்படி, ஐபோன் 12 இன் அறிமுக விழா 13ம் தேதி நடக்கும் என்றும், 16ம் தேதி முதல் ப்ரீ ஆர்டர் தொடங்கும் என்றும் 23ம் தேதி முதல், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆகிய போன்கள் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் புரா மேக்ஸ் ஆகிய போன்கள் நவம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என ஆப்பிள் இன்சைடர் உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளன.

இதற்கேற்ப, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் அதன் ஆன்லைன் ஸ்டோரை திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்
அக் 13ம் தேதி ஐபோன் 12 – அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டம்?