அக்ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடித்த ‘சூர்யவன்ஷி’ படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிவு

 

அக்ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடித்த ‘சூர்யவன்ஷி’ படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிவு

அக்ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் நடிக்கும் பிரம்மாண்ட படமான சூர்யவன்ஷியின் ட்ரைலரை வெளியீட்டை அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் ட்ரைலர் வெளியீட்டிற்கு முன்னரே சில காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரன்வீர் சிங் மற்றும் சாரா அலிகான் நடித்த ‘சிம்பா’ படத்தின் இறுதிக் காட்சியில் அக்‌ஷய் குமார் மற்றும் கத்ரீனா கைஃப்பின் காட்சிகளால்  சூரியவன்ஷி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது.

simba

அக்ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் நடிக்கும் பிரம்மாண்ட படமான சூர்யவன்ஷியின் ட்ரைலரை வெளியீட்டை அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் ட்ரைலர் வெளியீட்டிற்கு முன்னரே சில காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது பற்றி பேசிய படக்குழு “நாங்கள் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, டிரெய்லரின் ஒரு சிறிய பகுதி ஆன்லைனில் கசிந்தது. ஆம், சூரியவன்ஷி டிரெய்லரின் ஒரு சிறிய கிளிப்பைக் கண்டோம்.” என வருத்தம் தெரிவித்தனர்.

suryavanshi-90

அந்த வீடியோவில், கத்ரீனா கைஃப்பின் கண் சிமிட்டும் தோற்றத்தை நாம் காண்கிறோம், அதே நேரத்தில் அக்‌ஷய் குமார், சிம்பா ரன்வீர் சிங் மற்றும் சிங்கம் அஜய் தேவ்கன் மூவரும் திருட்டுத்தனமாக வருவதை பார்க்கமுடிந்தது. இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பாஸ்டர்படமாக இது அமையப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கசிந்த வீடியோ பற்றி தயாரிப்பாளர்த புகாரளித்ததால், ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த வீடியோ அகற்றப்பட்டுள்ளது.