அக்குவேராக பிரித்த எடப்பாடி… கடும் கோபத்தில் அதிமுக அமைச்சர்..!

 

அக்குவேராக பிரித்த எடப்பாடி… கடும் கோபத்தில் அதிமுக அமைச்சர்..!

ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குட்டி ராஜாவாக செல்வாக்குடன் வலம் வந்த தன்னை மாவட்ட பிரிப்பு மூலம் டம்மியாக்கிவிட்டதாகவே ஓ.பி.எஸ்- எடப்பாடி மேல் அமைச்சர் வீரமணி கோபத்தில் இருக்கிறார்.

வேலூர் மாவட்டம் ஜனவரி முதல் மூன்றாக பிரிக்கப்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று வருவாய் மாவட்டமாக செயல்படும். இதனால் புதிதாக உருவாக்கப்பட்ட 2 மாவட்ட செயலாளர் பதவியை பிடிப்பதில் கடும்போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதில் ராணிப்பேட்டைக்கு இப்போது இருப்பவரே தொடர்வார் என்று அவரது அடிபொடிகள் சொல்கிறார்கள்.

edappadi

 திருப்பத்தூருக்கு வீரமணி அமைச்சரே தொடர்ந்து நீடிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். பிரச்னையே வேலூர் என்ற பழைய மாவட்டத்துக்கு புதிய செயலாளர் யார் என்பதில்தான் அதிமுக தரப்பு அடித்து கொள்கிறது. அதிலும் வேலூர் மாநகர் செயலாளர், வேலூர் புறநகர் செயலாளர் என்று இரண்டு போஸ்டிங்குக்கு ஏகப்பட்ட ரகளை. தன்னை தான் போட வேண்டும் என்று தற்போதுள்ள இரண்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிமுகசெயலாளர்களுக்கு டென்ஷன் தருகிறார்கள்

இது ஒருபுறம் என்றால் இருவரும் கட்சியில் எதிரும், புதிருமாகவே இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குட்டி ராஜாவாக செல்வாக்குடன் வலம் வந்த தன்னை மாவட்ட பிரிப்பு மூலம் டம்மியாக்கிவிட்டதாகவே ஓ.பி.எஸ்- எடப்பாடி மேல் அமைச்சர் வீரமணி கோபத்தில் இருக்கிறார்.