அக்காதான் கட்சியை பக்காவா காலி பண்ணிட்டாங்க’…பிரேமலதா மேல் பழிபோடும் சுதீஷ்…

 

அக்காதான் கட்சியை பக்காவா காலி பண்ணிட்டாங்க’…பிரேமலதா மேல் பழிபோடும் சுதீஷ்…

இந்தத் தேர்தலில் திமுகதான் கண்டிப்பாக ஜெயிக்கும். அதனால் அவர்களுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ மன்றாடியும் தனது அக்கா பிடிவாதமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்து கட்சியின் எதிர்காலத்தையே காலி செய்துவிட்டார் என்று தனது நெருங்கிய வட்டாரங்களிடம் விஜயகாந்தின் மச்சான் எல்.கே.சுதீஷ் புகைந்துவருவதாகத் தகவல்.

இந்தத் தேர்தலில் திமுகதான் கண்டிப்பாக ஜெயிக்கும். அதனால் அவர்களுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ மன்றாடியும் தனது அக்கா பிடிவாதமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்து கட்சியின் எதிர்காலத்தையே காலி செய்துவிட்டார் என்று தனது நெருங்கிய வட்டாரங்களிடம் விஜயகாந்தின் மச்சான் எல்.கே.சுதீஷ் புகைந்துவருவதாகத் தகவல்

sudhish

.

கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது சுமார் பத்துநாட்க இழுவைக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்  மட்டுமே ஒதுக்கப்பட்டன. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பெட்டி கனமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் தேமுதிக அந்த டீலுக்கு ஒத்து வந்தது. வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கியது தேமுதிக.திமுக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி சவால் விடும் வகையில் பணத்தையும் வாரி இறைத்தார். ஆனால் 7 லட்சத்து 21 ஆயிரத்து 213 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.சுதிஷுக்கு 3 லட்சத்து 21 ஆயிரத்து 795 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. 

vijayakanth and sudhish

இதே போன்று வடசென்னை, திருச்சி மற்றும் விருதுநகரிலும் தேமுதிக வேட்பாளர்கள் படுபரிதாபமாக தோல்வி அடைந்தனர்.போட்டியிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கூட ஒன்பதில் வென்றுள்ள நிலையில் தேமுதிகவினர் இந்தத் தோல்வியை மாபெரும் அவமானமாகக் கருதுகின்றனர். நேற்றும் இன்றும் தேமுதிக அலுவலகத்துக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் என்று ஒரு காக்கா குருவி கூட வரவில்லை.

இத்தோல்வியால் மிகவும் அப்செட்டில் உள்ள சுதீஷ் தனது நண்பர்களிடம் ‘மாமாவின் உடல்நிலையைக் கவனித்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளை என்னிடம் ஒப்படைத்திருக்கவேண்டிய அக்கா தேவையில்லாமல் சில முடிவுகளை எடுத்துவிட்டார். அதிமுக கூட்டணி வேண்டாம் என்று தலைபாடாக அடித்துக்கொண்டேன் அவர் கேட்பதாக இல்லை. இன் கட்சியின் எதிர்காலம் கண்டிப்பாகக் கேள்விக்குறிதான்’என்று வண்டி வண்டியாய்ப் புலம்பி வருகிறாராம்.