அக்கரைக்கு தாமிரபரணி குடிநீர், இக்கரை மக்களுக்கு குடிக்க கழிவுநீர்!

 

அக்கரைக்கு தாமிரபரணி குடிநீர், இக்கரை மக்களுக்கு குடிக்க கழிவுநீர்!

ஆற்றின் மறுபுறம் உள்ள ஆத்தூர் பகுதிக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீரை எடுத்து வந்து சுத்திகரித்து சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. முக்காணி பகுதியில் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் பாலத்தைக் கடந்து சென்று அங்கு தண்ணீர் பிடித்து வருகின்றனர். பாலத்தை கடந்துசென்று தண்ணீர் பிடிக்க முடியாதவர்கள் வேறுவழியில்லாமல் மாசடைந்த நீரையே பயன்படுத்துவதால், 100 க்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி, சாகுபுரத்தில் 25 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் தாரங்கதாரா ரசாயன ஆலை, ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து முக்காணி தாமிரபரணி ஆற்றில் தடையின்றி தண்ணீரை உறிஞ்சி வருகின்றது. மங்கலகுறிச்சி, வாழவல்லான் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணை அமைக்கப்பட்டதால், நீர் உறிஞ்சும் இடத்தில் ஆறு வறண்டு காணப்படுகின்றது. ஆற்றில் நீர்வரத்து இல்லாதநிலையில், ஊற்று நீரையும் விடாமல் ஆலை நிர்வாகம் உறிஞ்சிவிடுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஆலடியூர்,கொற்கை, அகரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. இந்த கொடுமை போதாதென்று, வாழவல்லான் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் நீரும் மாசுகலந்து கலங்கலாக உள்ளது.

Adventure for drinking water

தாமிரபரணியில் நீர் உறிஞ்சும் இடத்தில் ஏரல் பகுதி கழிவு நீர் கலந்து ஆறு மாசடைந்து காணப்படுவதால் முக்காணி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வினியோகிக்கப்படும் வெளிர் மஞ்சள் நிற குடிநீரை கொண்டு குடிக்கவோ, சமைக்கவோ முடியாதநிலை தொடர்கிறது. ஆனால் அதேநேரம், ஆற்றின் மறுபுறம் உள்ள ஆத்தூர் பகுதிக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீரை எடுத்து வந்து சுத்திகரித்து சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. முக்காணி பகுதியில் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் பாலத்தைக் கடந்து சென்று அங்கு தண்ணீர் பிடித்து வருகின்றனர். பாலத்தை கடந்துசென்று தண்ணீர் பிடிக்க முடியாதவர்கள் வேறுவழியில்லாமல் மாசடைந்த நீரையே பயன்படுத்துவதால், 100 க்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.