அகர்வால் இரட்டை சதம்.. வலுவான நிலையில் இந்தியா.. திக்குமுக்காடும் வங்கதேச வீரர்கள்!

 

அகர்வால் இரட்டை சதம்.. வலுவான நிலையில் இந்தியா.. திக்குமுக்காடும் வங்கதேச வீரர்கள்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். வலுவான முன்னிலையில் இந்தியா ஆடி வருகிறது.

India

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Cricket

 

இதனையடுத்து பந்துவீச்சை துவங்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பம் முதலே வங்கதேச வீரர்கள் தங்களது வேகத்தால் தினறடித்தனர். இதனால் செய்வதறியாது திக்குமுக்காடிய வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். 

முதல்நாள் உணவு இடைவேளைக்கு பிறகு சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 86/1 என இருந்தது. 

India

இன்று மீண்டும் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு புஜாரா (54) அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த கேப்டன் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

India

மறுமுனையில் துவக்க வீரர் அகர்வால் சதம் அடித்தார். நிலைத்து ஆடிவந்த ரஹானே அரைசதம் அடித்தவுடன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜடேஜா நல்ல கம்பெனி கொடுக்க அகர்வால் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 100 ஓவர்கள் முடிவில் 365 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் இருக்கிறது.