அகதிகள் கணக்கெடுப்பைத் தொடங்கிய பா.ஜ.க எம்.பி-க்கள்! – எங்கே போய் முடியுமோ?

அகதிகள் கணக்கெடுப்பைத் தொடங்கிய பா.ஜ.க எம்.பி-க்கள்! – எங்கே போய் முடியுமோ?

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அகதிகளை கணக்கெடுக்கும்படி பா.ஜ.க எம்.பி-க்களுக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனால், நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கணக்கெடுக்கும் பணியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தொகுதியில் உள்ள அகதிகள் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

refugees

பாரதிய ஜனதாவுக்கு மொத்தம் 303 எம்.பி-க்கள் உள்ளனர். இவர்களில் பலர் அமைச்சர்களாக, மூத்த தலைவர்களாக உள்ளனர். இவர்கள் இந்த பொறுப்பைக் கட்சி நிர்வாகிகளிடம் பிரித்துக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி-யான கவுதம் கம்பீர் தன்னுடைய தொகுதியில் 16 ஆயிரம் அகதிகள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் கோபால் தொகுதி எம்.பி குமார், தன்னுடைய தொகுதியில் 24 ஆயிரம் பேர் இருக்கலாம் என்றும் பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் எல்லாம் இங்குள்ள முகாமில் தங்கியுள்ளார்கள் என்றும் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளனர்.

gambhir

இவர்களில் இஸ்லாமியர்கள் அல்லாதோரை தேர்வு செய்து அவர்களுக்கு முதற்கட்டமாக இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும், இந்த கணக்கெடுக்கும் பணி டிசம்பர் 31க்குள் முடிக்கப்படும் என்றும் பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இப்படி கணக்கெடுப்பு நடத்தி பிரித்துவிட்டு, மற்றவர்களை என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் வகையில் இருப்பதாக பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் விமர்சித்துள்ளனர்.