ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது

 

ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது

ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகியுள்ளது.

டெல்லி: ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் வெகுவிரைவில் சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதில் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்நிலையில், ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகியுள்ளது. கேலக்ஸி எஸ்10 செய்யப்பட உள்ள நிகழ்வின் இந்திய நேரத்துடன் கூடிய சிறப்பு பேனர் வெளியிடப்பட்டிருந்தது. இத்துடன் அந்த நிகழ்வுக்கான நோட்டிஃபை பட்டனும் இடம்பெற்றிருந்தது.

புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் இயர்போன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் சர்வதேச அரங்கில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு உடனே இந்தியாவிலும் அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிப்ரவரி 21-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சர்வதேச அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.