ஃபோர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த விஜய் தேவரகொண்டா!

 

ஃபோர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் சாதித்த 30 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் சாதித்த 30 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

ரவுடி பேபி என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா பெல்லி சூப்புலு திரைப்படத்தின்  மூலமாக டோலிவுட் திரையுலகில் கால்பதிக்க இவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் டோலிவுட், கோலிவுட், பாலிவுட்  என்று தனக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார்.

அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம்’, `டாக்ஸிவாலா போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும்  தேவரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகை ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்டுள்ள `30 அண்டர் 30’யில் நடிகர் விஜய் தேவரகொண்டா இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையும் தட்டிச்சென்றுள்ள  இவர் சென்ற ஆண்டு அதிக சம்பளம் பெறும் இந்திய பிரபலங்கள் பட்டியலில் 72-ம் இடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து நெகிழ்ச்சி அடைந்த விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில்  “25 வயதில் ஆந்திரா வங்கில 500 ரூபாய் இல்லனா அக்கவுண்ட் கிளோஸ் ஆகிடும். அதனால 30 வயசுக்குள்ள செட்டிலாகிடுனு அப்பா சொல்லுவார். பெத்தவங்க ஆரோக்யமா இருக்கும்போது இதெல்லாம் பண்ணாதான் பின்னாடி சந்தோஷமா இருக்க முடியுமென்று சொன்னார். 4 வருஷம் கழிச்சு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான் 30 அண்டர் 30ல இருக்கேன்’ என்று மகிச்சியோடு அதில் பதிவிட்டுள்ளார்.   

சினிமா  துறைக்கு எந்த வித்தபின்னணியும் இன்றி வந்த விஜய் தேவரகொண்டா இந்த இடத்தை பிடித்ததற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.