ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டில் புழு! பெற்றோர்களே உஷார்!!

 

ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டில் புழு! பெற்றோர்களே உஷார்!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குழந்தைகள் வாங்கிய ‌ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டில் புழுக்கள் இருந்தது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குழந்தைகள் வாங்கிய ‌ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டில் புழுக்கள் இருந்தது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5star

பட்டணம்,  வடுகம்‌, புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு கிருஷ்ணா ஏஜன்ஸ்சி மூலம் சாக்லெட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பட்டணம் பகுதியில் உள்ள கடைக்கு சென்று குழந்தைகள் ‌ஃபைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கியுள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக சாக்லெட்டை பிரித்த போது, அதில் ஏராளமான புழுக்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் கடைக்காரரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சாக்லெட்டுகள் காலாவதியாக இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், அவற்றில் புழுக்கள் இருந்ததால் சம்பந்தபட்ட ஏஜென்சி மீது  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் ‌அளிக்கப்படும் என கடைக்காரர் தெரிவித்துள்ளார்.