ஃபேஸ்புக் லைவில் வெளியாகும் ‘செக்கச் சிவந்த வானம்’ இசை?

 

ஃபேஸ்புக் லைவில் வெளியாகும் ‘செக்கச் சிவந்த வானம்’ இசை?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தின் இசை ஃபேஸ்புக் லைவில் வெளியாகவுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வரும் செப்.5ம் தேதி ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்கில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்களை நேரடியாக ஏ.ஆர்.ரகுமான் இசைத்து பாடுகிறார். இந்த நிகழ்ச்சி ஏ.ஆர்.ரகுமானின் ஃபேஸ்புக் பக்கத்தில் லைவாக ஒளிபரப்பாகவுள்ளது.

 

View image on Twitter

 

அரவிந்த்சாமி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் கேரக்டர் போஸ்டரும், டிரைலரும் ரசிகர்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசைக்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.