ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களில் டார்க் மோடு அம்சம் அறிமுகம்

 

ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களில் டார்க் மோடு அம்சம் அறிமுகம்

ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களில் டார்க் மோடு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களில் டார்க் மோடு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களில் டார்க் மோடு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் மாதம் இந்த அம்சம் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீண்ட நாட்களாகியும் அது நடைமுறைக்கு வராமலே இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களில் டார்க் மோடு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், சவூதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த அம்சம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், தற்போது மேனுவலாக ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களில் டார்க் மோடு அம்சத்தை செயல்படுத்த முடியும். அத்துடன் சாட்டிங்கின் போது நிலவு எமோஜியையும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், டார்க் மோடு அம்சத்தை ஆக்டிவேட் செய்த பின்பு ஒரு குறிப்பு தோன்றுகிறது. அதாவது இந்த அம்சம் இன்னும் பரிசோதனையில் இருப்பதால் சில சிறு, சிறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.