ஃபேஸ்புக் நேரலையில் மீன் விற்பனை படுஜோர்!

 

ஃபேஸ்புக் நேரலையில் மீன் விற்பனை படுஜோர்!

சந்தையைவிடக் குறைந்த விலைக்கு மீன்களை வாங்கி நேரடியாக வீட்டு வாசலில் விநியோகிக்கும் சேவையை விரும்புகின்றனர் மலேசியர்கள்

மலேசியாவில் உள்ள மீன் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை நடத்த சமூக ஊடகங்களை கையில் எடுத்துள்ளன. இதற்காக  ஒரு இணையதளத்தையோ அல்லது அமேசான், ஃபிளிப்கார்ட்டை போன்றவற்றையோ நாடவில்லை. 

சந்தையைவிடக் குறைந்த விலைக்கு மீன்களை வாங்கி நேரடியாக வீட்டு வாசலில் விநியோகிக்கும் சேவையை விரும்புகின்றனர் மலேசியர்கள். இதற்காக மலேசியாவில் கூடையை வைத்துக்கொண்டு மீன், மீன் என கூச்சல் போட முடியாது அல்லவா அதற்காக MyFishMan என்ற நிறுவனம் ஃபேஸ்புக் வழியாக மீன்களை விற்பனை செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளது. நேரலை வழியாக மீன்களைப் பார்த்து, வாங்கலாம். மேலும் குறிப்பிட்ட சில ரக மீன்கள் வாட்ஸ் அப் வீடியோக்கள் வழியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Fish

தினமும் இரவு எட்டு மணி முதல் நள்ளிரவு வரை மீன்கள் நேரலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 300 கிலோகிராம் வரையிலான மீன்கள் விற்பனை நேரலையின் மூலம் விற்பனை செய்யப்படுவதாக MyFishMan நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நேரலை ஒளிபரப்பையும் 200இலிருந்து 1000பேர் வரை பார்க்கின்றனர். சந்தைக்குச் செல்ல நேரம் இல்லாதவர்கள் இவ்வழியாக மீன்களை அதிகம் வாங்குகின்றனர்.