ஃபேஸ்புக்கில் பிழை கண்டுபிடித்தே கோடீஸ்வரராக இருக்கும் நவீன நக்கீரர்!

 

ஃபேஸ்புக்கில் பிழை கண்டுபிடித்தே கோடீஸ்வரராக இருக்கும் நவீன நக்கீரர்!

இன்ஸ்டகிராம் செயலியின் கட்டுமானத்தில் உள்ள இந்த தொழில்நுட்ப பிழைமூலம் எந்தவொரு கணக்கையும் எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்து அதனை அந்நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். உடனடியாக பிழை நிவர்த்தி செய்யப்பட்டது. கூடவே 20 லட்சம் சன்மானமும் வழங்கப்பட்டது.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டகிராம் செயலியை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களும் இதில் அடக்கம். ஆனால், இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்த ஒரு தொழில்நுட்ப பிழையை கண்டுபிடித்து, அந்நிருவனத்திற்கு சுட்டிக்காட்டிய பெருமை தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. பெருமை மட்டுமல்ல, சன்மானமாக 20 லட்ச ரூபாய் பணத்தையும் அந்நிறுவனம் வெகுமதியாக வழங்கியுள்ளது.

Laxman Muthiah

மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்காக பயனர்களின் மொபைல் எண்ணுக்கு இன்ஸ்டாகிராம் அனுப்பும் பாஸ்வேர்ட் ரீசெட் மெசேஜ் அமைப்பில் தொழில்நுட்ப பிழை இருந்திருக்கிறது. கணினி பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியாளரான லக்ஷ்மண் முத்தையா, இன்ஸ்டகிராம் செயலியின் கட்டுமானத்தில் உள்ள இந்த தொழில்நுட்ப பிழைமூலம் எந்தவொரு கணக்கையும் எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதை  கண்டுபிடித்து அதனை அந்நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். உடனடியாக பிழை நிவர்த்தி செய்யப்பட்டது. கூடவே 20 லட்சம் சன்மானமும் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்ல, ஏற்கெனவே ஃபேஸ்புக்கிலும் இதே மாதிரி ஒரு குறை கண்டுபிடித்து, நிவர்த்தி செய்யப்பட்டு, சன்மானமும் பெற்றிருக்கிறார் முத்தையா. கூடியவிரைவில் பிழை கண்டுபிடித்தே கோடீஸ்வரராக இருக்கும் நம்ம புள்ள முத்தையாவிற்கு வாழ்த்துகள்!