ஃபுட் கோர்ட்: நீங்களும் வீட்டிலேயே செய்யலாம் சுவையான பாதாம் அல்வா!

 

ஃபுட்  கோர்ட்:  நீங்களும் வீட்டிலேயே செய்யலாம் சுவையான பாதாம் அல்வா!

சுவையான சத்தான பாதாமை வைத்து சுகர் ஃப்ரீ பாதாம் அல்வா செய்வது எப்படி என்பதைக் காணலாம்!

முந்திரி, பிஸ்தா, வால்நட் வரிசையில் பாதாம் பருப்பும் ஒன்று. பாதாமில் நார்சத்துகள், வைட்டமின்கள், மற்றும் தாது உப்புகள் எனப் பல நன்மைகள் இருக்கிறது.எந்த உணவிலும் பாதாம் பருப்பைச் சேர்த்தால் அதற்கென ஒரு தனி சுவை இருக்கும். அவ்வளவு சுவையான சத்தான பாதாமை வைத்து சுகர் ஃப்ரீ பாதாம் அல்வா செய்வது எப்படி என்பதைக் காணலாம்!

almonds

தேவையான பொருட்கள்:

  • பாதாம் – 100 கிராம்
  • தண்ணீர் – 300 மில்லி
  • பால் – 200 மில்லி
  • நெய் – 50 கிராம்.
  • டீஸயர் (சக்கரைக்கு மாற்று) – 75 கிராம்.
  • குங்குமப்பூ – 0.5 கிராம்.
  • ஏலக்காய் தூள் – 10 கிராம்.
  •  

badam

செய்முறை:

  • சுடு தண்ணீரில் பாதாமை ஊறவையுங்கள். பின்பு பாதாமை குளிர்ந்த தண்ணீரால் அலசுங்கள்.பாதாமுடைய தோலை உரித்து மற்றும் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவையுங்கள்.
  • பாதமையும் பாலையும் சேர்த்து  நன்கு அரைக்கவும் .பின்பு மிதமான சூட்டில் நெய்யை வாணலியில்  சுடவைக்கவும். நெய் சூடானதும், பாதாம் கலவையை போட்டுச் சமைக்கவும்,தொடர்ந்து கிளறி கொண்டேயிருக்கவும்.
  • பாலினுடைய ஈரப்பதம் ஆவியாகும் வரை சமையுங்கள், பின்பு அதில் டீஸயர், குங்குமப்பூவை அதில் சேர்த்து தொடர்ந்து கிளறி கொண்டேயிருங்கள். வாணலியில்  அல்வா ஒட்டாமல் நெய் வெளியில் வரும் வரை கிளறி ஏலக்காய், தேவையான நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்து  இறக்கினால் அல்வா தயார்.