ஃபுட் கோர்ட்: நீங்களும் செய்யலாம் மொறுமொறு பேபிகார்ன் கோங்கூரா ஃப்ரை!

ஃபுட் கோர்ட்: நீங்களும் செய்யலாம் மொறுமொறு பேபிகார்ன் கோங்கூரா ஃப்ரை!

பேபிகார்ன் சூப், பேபிகார்ன் கிரேவி, பேபிகார்ன் மஞ்சூரியன் எனப் பலவகைகள் செய்யலாம். பேபி கார்ன் சுவையானது மட்டுமல்லாமல் சத்தானதும் கூட. அந்த அளவுக்கு உடலுக்கு நன்மை தரும் பேபி கார்னில்  பேபிகார்ன் கோங்கூரா ஃப்ரை எப்படிச் செய்வது என்பதைக் காணலாம்!

தேவையான பொருட்கள்

பேபிகார்ன் – மூன்று (நீளவாக்கில் நறுக்கியது)

புளிச்ச கீரை – அரை கப்

பூண்டு – மூன்று பல்

காய்ந்த மிளகாய் – ஒன்று

மிளகு – அரை டீஸ்பூன்

ரொட்டி தூள் – கால் கப்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

வாணலியை  காய வைத்துக் காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு, பூண்டு, கோங்கூரா கீரை சேர்த்து வதக்கவும். பின், அதனுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு பேபிகார்னை நீளவாக்கில் நறுக்கி, அரைத்த விழுதை அதில் தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில்  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பேபிகார்னை பிரட் தூளில் புரட்டி, பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால்  சுவையான பேபிகார்ன் கோங்கூரா ஃப்ரை ரெடி.