ஃபுட் கோர்ட் : நீங்களும் செய்யலாம் சிக்கன் கேப்ரியல்

 

ஃபுட் கோர்ட் : நீங்களும் செய்யலாம் சிக்கன் கேப்ரியல்

புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் சிக்கன், மட்டன், மீன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் சிக்கன், மட்டன், மீன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அசைவ பிரியர்களில்  சிலர் மீண்டும் அசைவ உணவைச் சுவைக்க தயாராகியுள்ளனர். அசைவத்தில் சிக்கன் உணவு பலரது தேர்வாக இருக்கும்.  அந்த வகையில்  சிக்கன் காப்ரியல் செய்வது எப்படி என்பதைக் காணலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கி 

கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது

மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை

வெங்காயம் – 2 

தக்காளி – 1

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகு – தேவையான அளவு 

லவங்கம் – 5

பட்டை – 3

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை பழம் சாறு – இரண்டு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 5

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

கொத்தமல்லி, மிளகு, லவங்கம், இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, மனஜ்ல் தூள், சீரகம், சர்க்கரை, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில்  சுத்தம் செய்த சிக்கன் மற்றும் அரைத்த விழுது, எலுமிச்சை பழம் சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இதை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின், ஊறவைத்த சிக்கன் சேர்த்து நன்றாகக் கிளறி வதக்கவும். கலவையானது சுண்ட வதக்கியதும் இறக்கிப் பரிமாறினால் சுத்தமான சிக்கன் காப்ரியல் ரெடி.