ஃபுட் கோர்ட்: நீங்களும் செய்யலாம் சத்தான இளநீர் சூப்!

 

ஃபுட் கோர்ட்: நீங்களும் செய்யலாம்  சத்தான இளநீர் சூப்!

இளநீர் என்ற வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது?! எவ்வளவு இதம், என்னவொரு குளுமை! ஆனால் இளநீர் உடலுக்கு குளுமை தருவதைத் தாண்டி, இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக் கூடியது. வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை.

இளநீர் என்ற வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது?! எவ்வளவு இதம், என்னவொரு குளுமை! ஆனால் இளநீர் உடலுக்கு குளுமை தருவதைத் தாண்டி, இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக் கூடியது. வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே. இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர், ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். இதில் வித்தியாசமாக இளநீர் சூப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்

இளநீர் (வழுக்கை)  – கால் கப்

இளநீர் – ஒரு கப்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

கேரட் – இரண்டு டீஸ்பூன்

பீன்ஸ் – இரண்டு டீஸ்பூன்

வெள்ளை மிளகு தூள் – கால் டீஸ்பூன்

கருப்பு மிளகு தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

காய்ச்சி, ஆறவைத்த பால் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

இளநீர் வழுக்கை மற்றும் கால் கப் இளநீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கிய பின், அரைத்த விழுது, வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள், உப்பு மற்றும் மீதியுள்ள இளநீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.

பிறகு, இறக்கி, பால் ஊற்றிக் கிளறினால்  சுவையான இளநீர் சூப் ரெடி