ஃபுட் கோர்ட்: சுட சுட சாப்பிடலாம் புதினா கேழ்வரகு பக்கோடா!

 

ஃபுட் கோர்ட்: சுட சுட சாப்பிடலாம் புதினா கேழ்வரகு பக்கோடா!

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. இன்றோ காணக்கிடைக்காத அரியத் தானியமாக மாறிவிட்டது.

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. இன்றோ காணக்கிடைக்காத அரியத் தானியமாக மாறிவிட்டது. கேழ்வரகில் கஞ்சி, கூழ், பால், அடை எனப் பல உணவுகள் தயாரிக்கலாம்.  இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக  புதினா கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி என்பதைக் காணலாம் வாங்க!

kezhvaragu

தேவையான பொருட்கள்

புதினா – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

கேழ்வரகு மாவு – இரண்டு கப்

கடலை மாவு – நான்கு டீஸ்பூன்

அரிசி மாவு – நான்கு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

மிளகாய்த் தூள் – இரண்டு டீஸ்பூன்

தண்ணீர் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

mint

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, நறுக்கிய புதினா, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை கொத்தமல்லி, மிளகாய்த் தூள், சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவைப் பக்கோடா போட்டுப் பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.