Home ஜோதிடம் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கும்பிட்டு சிறப்புற வேண்டிய கோயில்கள்

புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கும்பிட்டு சிறப்புற வேண்டிய கோயில்கள்

வாணியம்பாடி ஶ்ரீஅதிதீஸ்வரர் கோயில்

புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கும்பிட்டு சிறப்புற வேண்டிய கோயில்கள்

புனர்பூசம்:

கோயில்: வாணியம்பாடி ஶ்ரீஅதிதீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீபெரியநாயகி
தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.
சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும். 
இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7.

பூசம்:

கோயில்: விளங்குளம் ஶ்ரீஅட்சயபுரீஸ்வரர் கோயில் 
அம்மன்: ஶ்ரீஅபிவிருத்தி நாயகி
தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான “பித்ரசாய்’ சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.
சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும். 
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: மாலை4- இரவு7. 

ஆயில்யம்:

கோயில்: திருந்துதேவன்குடி ஶ்ரீகற்கடேஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீஅருமருந்துநாயகி, ஶ்ரீஅபூர்வநாயகி
தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி “ஶ்ரீகற்கடேஸ்வரர்’ என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் “திருந்துதேவன்குடி’ என்ற பெயர் வந்தது. “நண்டுக்கோயில்’ என்றால் தான் தெரியும். 
சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும். 
இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை9- மதியம் 1.30, மாலை 4- இரவு7.

மகம்:

கோயில்: ஒடுக்கம் தவசிமேடை ஶ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீமாணிக்கவல்லி, ஶ்ரீமரகதவல்லி
தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார். 
சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு. 
இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை6- மாலை6.

பூரம்:

கோயில்: திருவரங்குளம் ஶ்ரீஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீபெரியநாயகி
தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.
சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30

உத்திரம்:

கோயில்: இடையாற்றுமங்கலம் ஶ்ரீமாங்கல்யேஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீமங்களாம்பிகை
தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம். 
சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8.
 

புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கும்பிட்டு சிறப்புற வேண்டிய கோயில்கள்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ‘வீட்டுமனை’ இலவசம்; வட்டாட்சியரின் அசத்தல் அறிவிப்பு!

பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படுமென வட்டாட்சியர் அறிவிப்பது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்...

தமிழர்களின் வீர விளையாட்டு; சிலம்பத்திற்கு ஒன்றிய அரசு அங்கீகாரம்!

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் இணைக்கப்பட்டு இருப்பதாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

உள்ளாட்சி தேர்தல்; நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.6 மற்றும் 9...

2ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்; 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு!

தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா...
TopTamilNews